– பாலகுமார் BCB
ஒரு “மஞ்சள் வெயில் மறையும் மாலை வேளையில்! லேசான மழைச்சாரல் துறி கொண்டிருந்த நேரம், பேருந்து நிலையத்தில் ஓரமாய் நின்று! தனது கைப்பேசியில்! “தன் தற்போதைய காதலியாக! வருங்கால மனைவியாக நினைத்துக் கொண்டிருக்கும், “கார்த்திகா”-வின் புகைப்படத்தை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் “வினோத்”.
அங்கே தொலைவில் ஒரு பாத கொலுசின் ஒலி இவன் காதுகளில் விழுந்தது! உடனே லேசான புன்னகையுடன், அங்குத் திரும்பி பார்க்க துவங்கிவிட்டான் “வினோத்.
எதிரில் “கார்த்திகா” வந்துக் கொண்டிருந்தாள்! உடனே இவனது விரல்கள் “தலை முடியை கோதத் தொடங்கின! முகத்தில் பயம் கலந்த ஒரு சந்தோஷம் தென்பட்டது! இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று! “வினோத்தின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
அதற்கு அவனுடைய “மனம்!! இப்படி தான் நீ ரெண்டு மாசமா சொல்லிட்ருக்க! இதுவரைக்கும் போய் பேசுனதே இல்ல! இன்னைக்கு மட்டும் போயி பேசிடுவியா? என்று எதிர்கேள்வி கேட்டது.
அதற்குள் சற்று அருகில் வந்தாள் “கார்த்திகா”. இவனோ சற்று பின்நோக்கி செல்லத் தொடங்கினான்!! இப்படியே சற்று பின்நோக்கி நடந்து, நடந்து, “வினோத்-ஐ கடந்தே சென்றுவிட்டாள் “கார்த்திகா”.
மறுபடியும் அவனுடைய மனம் சொன்னபடியே நடந்தது! உடனே தன் தலையில் லேசாக அடித்துக்கொண்டு! ஏண்டா வினோத் இப்படி சொதப்புற! என்று தன்னை தானே கேட்டுக்கொண்டார்..
சற்று தொலைவில் சென்ற “கார்த்திகா” திரும்பி வினோத்-ஐ பார்த்தாள்!, லேசான புன்னகையுடன்!!!. உடனே வினோத்தின் மனதில் ராஜா சார் bgm கேட்கத் தொடங்கியது!! இதுவரை திரும்பி பார்க்காத “கார்த்திகா” அன்று திரும்பி பார்த்து புன்னகைத்ததை அவனால் நம்பமுடியவில்லை! தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு, வலித்தவுடனே உண்மை என்று நம்பினான்! அதை நினைத்துக் கொண்டே அங்கிருந்து வீட்டிற்கு சென்றான் “வினோத்”…
“கார்த்திகா” அவனைப் பார்த்து சிரித்ததை எண்ணிக்கொண்டே வீட்டின் வாசலில் தனது தாயார் நின்றுக்கொண்டிருந்ததை கூட கவனிக்காமல் உள்ளே சென்றுவிட்டான் “வினோத்”…
டேய் வினோத்… என்ன டா… நான் வாசல்ல நீக்கிறத கூட கவனிக்காம, உன் பாட்டுக்கு உள்ள போற! வேலை இல்லையா சீக்கிரமா வந்துட்ட… என்று தன் அம்மா கேட்டாள்…
அப்போது தான் “வினோத்திற்கு” ஞாபகமே வந்தது! அய்யோய்யோ ஆமா நான் இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு தான அவள பார்க்கப் போனேன்! ஞாபகமே இல்லமா வீட்டுக்கு வந்துட்டேன்!
டேய் “வினோத்” உன்கிட்ட தான கேக்குறேன்! ஏண்டா, பேய் அறஞ்ச மாறி நிக்குற!! என்றாள் அம்மா!! அது ஒன்னும் இல்ல மா! இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிருக்கு. அதான் வந்துட்டேன் என்று மலுப்பினான் “வினோத்”. ஓ அப்படியா… சரிடா வா சாப்பிடலாம் என்று கூறி சென்றாள் “அம்மா”.
ம்… நீ போ மா… வரேன் என்று சொன்னான் “வினோத்”. உடனே தன் வேலை செய்யும் இடத்தில் கைப்பேசியில் தொடர்புக்கொண்டு, சார் நான் வேலைக்கு நாளைக்கு வரேன்! இங்க ஒரு இடத்துக்கு வந்தேன் லேட் ஆயிருச்சு! என்று சொல்லவும், தன் முதலாளியும் ஒப்புக்கொண்டு! சரி பா நாளைக்கு வந்துரு கண்டிப்பா! என்று சொல்லிவிட்டார்! இவனும் ஒ.கே. சார் என்று சொன்னான்!!
எப்போதும் காலை நேரத்தில் தான் கார்த்திகாவை பார்க்கச் செல்வான் “வினோத்”! அன்று காலையில் அவன் வருவதற்கு முன்னே “கார்த்திகா” சென்றுவிட்டாள்! அதனால் தான் அவன் வேலைக்கு சென்றும்! வேலை பார்க்க முடியவில்லை அவனால்! அதனால் தான் பர்மிஷன் கேட்டு, அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று வந்தான் “வினோத்”!
உடனே அம்மாவின் குரல் ஒலித்தது! டேய் “வினோத் சாப்பாடு போட்டு எவ்ளோ நேரம் ஆகுது! இன்னும் அந்த ஃபோனை வைச்சு என்ன பண்ணிட்ருக்க! சீக்கிரம் வாடா சாப்பிட என்று! உடனே “வினோத்”… எனக்கு பசிக்கல மா. நீ சாப்பிடு என்றான்! ஏண்டா உடம்பு சரியில்லையா என்று கேட்டாள் “அம்மா”!
அதெல்லாம் ஒன்னும் இல்ல மா… நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! அதான் பசிக்கல என்றான் “வினோத்”. அப்படி என்ன டா சந்தோஷம்? என்று அம்மா கேட்டாள்! அது! அது வந்து ஒன்னும் இல்ல மா! நான் “கணேஷ்” வீடு வரைக்கும் போயிட்டு வந்துரேன் மா! என்று சொல்லி புறப்பட்டான்! “வினோத்…
“கணேஷ்-ம்” “வினோத்-ம்” சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்! கணேஷ்-ஐ சந்திக்க வீட்டிற்கு செல்லும் வழியில், அவன் ஒரு டீ கடையில் நின்றிருந்தான்! அவனை பார்த்தவுடன் அங்கேயே சென்றுவிட்டான் “வினோத்”!. வினோத்-ஐ கண்டவுடன் “கணேஷ்-ன்” மனதில்! இவனா… மறுபடியும் லவ் ஸ்டோரி சொல்லிக் கொல்லுவனே! இவன்கிட்ட இருந்து எப்படியாவது தப்பிக்கனுமே! என்று நினைத்துக் கொண்டான்….
“டேய் கணேஷ்!!! அவ இன்னைக்கு என்னைப் பார்த்து சிரிச்சுட்டா டா! அப்படியே உடம்பெல்லாம் ஏதோ பண்ணுது டா… என்று புன்னகையுடன் கூறினான் “வினோத்”!
அதற்கு… டேய் சஸ்ட் சிரிச்சுட்டு தானே போயிருக்கா! அதுக்கு ஏதோ லவ்-க்கு ஒ.கே. சொன்ன மாதிரி இந்த குதி குதிக்கிற! என்றான் “கணேஷ்”!
டேய் அதெல்லாம் லவ் பண்றவங்களுக்கு தான் அந்த ஃபீலிங் எல்லாம் புரியும்! நீ சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் சிங்கிளா தான இருக்க! உனக்கு எப்படி டா புரியும் என்னோட ஃபீலிங்! என்றான் “வினோத்”!
அதற்கு ஆமா… நாங்க சிங்கிளா இருக்கோம்! நீ டெய்லி பத்து பொண்ண லவ் பண்ணிட்ருக்க! பார்த்த ஒரு பொண்ணு கிட்டயே இன்னும் லவ்-அ சொல்ல வக்கில்ல! பெரிசா பேச வந்துட்டான்! என்றான் “கணேஷ்”!
டேய் நீ வேணா பாரு இன்னும் இரண்டு நாள் அ அவகிட்ட லவ் அ சொல்றேன் டா என்று சவால் விட்டான் “வினோத்”!
எப்படி..
இரண்டு நாள்-னா, உங்க கணக்குப்படி இரண்டு மாசம் தான மிஸ்டர் “வினோத்” என்று கிண்டலடித்தான் “கணேஷ்”!
நான் லவ்-அ சொல்லிட்டு அவ என்ன சொல்றானு உன்கிட்ட வந்து சொல்றேன் என்றான் “வினோத்”! உன்ன எல்லாம் நம்பமுடியாது டா லவ்-அ சொல்லாமலே என்கிட்ட சொல்லிட்டனு சொல்லுவ! என்றான் “கணேஷ்”!
சரி, நாளைக்கு நீயும் கூட வா. உன் முன்னாடியே லவ்-அ சொல்றேன். அப்ப நம்புவியா என்றான் “வினோத்”! பார்ரா அவ்ளோ தைரியம் வந்திருச்சா உனக்கு! என்றான் “கணேஷ்”!
சரி நான் காலையில ஏழு மணிக்கு வர்றேன். நீ ரெடியா இரு என்று சொல்லி புறப்பட்டான் “வினோத்”!
வீட்டிற்கு வந்ததும் டேய் வினோத் சாப்பிட்டியா என்று கேட்டாள் அம்மா! ம்… சாப்டேன் மா… கணேஷ்-ம் நானும் வெளியே சாப்பிட்டோம்! சரி மா எனக்கு தூக்கம் வருது. நான் போய் தூங்குறேன் மா என்று கூறி தூங்கச் சென்றான் “வினோத்”!
படுக்கைஅறையில் படுத்தும், அவளின் நினைவுகளை நினைத்துக் கொண்டே தூங்க முடியவில்லை அவனால்! இப்படியே இரவு முழுவதும் கடந்தது! மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கி விடியத் தொடங்கியது! சிறிதளவும் தூக்கம் இல்லாமல் கண்களை கசக்கியப்படியே எழுந்தான் “வினோத்”! உடனே குளித்து விட்டு, நேரத்தைப் பார்த்தான்! ஏழு மணி ஆக அரைமணி நேரம் இருந்தது! உடனே கிளம்பி கணேஷ் வீட்டிற்கு சென்றான் “வினோத்”!
வீட்டின் வாசலில் நின்று கணேஷ்-ஐ கைப்பேசியில் அழைத்தான்! டேய் உன் வீட்டு வாசல்ல தான் நிக்கிறேன். சீக்கிரம் வா டா என்றான் “வினோத்”! டேய் ஏன் டா தூக்கத்தக் கெடுக்குற! உனக்கு லவ் பண்ண வேற டைமே கிடைக்கலயா! என்றான்”கணேஷ்”.
டேய் வா டா சிக்கிறம்! அவ போயிட போறா என்றான் “வினோத்”! சரி வெய்ட் பண்ணு வர்றேன் என்றான் “கணேஷ்”!! இருவரும் அந்தப் பேருந்து நிலையத்தில் ஓரமாய் நின்று கார்த்திகாவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்!
சிறிது நேரம் கழித்து அதே போல ஒரு பாத கொலுசின் ஒலி இவன் காதுகளில் விழுந்தது!
டேய் கணேஷ் கார்த்திகா வந்துட்டா டா என்றான் “வினோத்”!
எங்க டா யாரையும் காணம் என்றான் “கணேஷ்”!
அங்கேயே தூரத்துல பார் ரா என்றான் “வினோத்”!
ஆமா வர்ரா. எப்படி டா இங்கே இருந்தே கண்டுபிடிச்ச என்று ஆச்சரியத்துடன் கேட்டான் “கணேஷ்”!
அதெல்லாம் ஒரு காதல் ரகசியம் டா! அது உனக்குப் புரியாது! என்றான் “வினோத்”!
கார்த்திகா மெல்ல, மெல்ல பக்கம் வரத் தொடங்கினாள்!
இவன் இதயத் துடிப்பு ராக்கெட் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது! அருகில் வந்தவுடன் “கார்த்திகா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான் “வினோத்”!
அதைக் கேட்டவுடன் அங்கேயே நின்று என்ன பேசனும் என்று பதிலாளித்தாள் “கார்த்திகா”! இல்ல எப்படி சொல்லனும்னு தெரியல என்று பதட்டத்துடன் கூறினான் “வினோத்”!
ஏங்க எட்டு மணி ஆகுது! இன்னும் தூங்கிட்ருக்கிங்க! ஆஃபிஸ் போகலயா என்று சட்டென்று ஒரு குரல் ஒலித்தது!
சட்டென்று வினோத்தின் கனவு கலைந்தது!
ஏங்க உங்கள தான் என்று மறுபடியும் ஒரு குரல்! யாரென்று பார்த்தால் வினோத்தின் மனைவி “கார்த்திகா”!
செல்லம் எந்திரிச்சுட்டேன் டா என்று பதிலளித்தான் “வினோத்”
உடனே என்ன மறுபடியும் கனவா! கனவுள நான் சிரிச்சேனா! என்று கேட்டாள் “கார்த்திகா”!
ஆமா செல்லம். எப்படி கரெக்ட் ஆ கேக்குற என்றான் “வினோத்”! ஆமா கல்யாணம் ஆகி இரண்டு வருசத்துகுள்ள இதுவரைக்கும் இரண்டாயிரம் தடவ இந்த ஒரு சீன் மட்டும் தான் உங்க கனவுல வருதுன்னு செல்லிட்ருகிங்க! பின்ன தெரியாத! என்று கேட்டாள் “கார்த்திகா”!
உடனே கார்த்திகாவின் கையைப் பிடித்துக்கொண்டு! செல்லம் இரண்டு வருஷம் ஆனா என்ன! நீ பர்ஸ்ட் டைம் என்னை பார்த்து சிரிச்ச அந்த ஒரு நிமிடம்! என்னால எப்பவுமே மறக்கவே முடியாது கார்த்திகா! என்றான் “வினோத்”
போதும் போதும் உங்க ரொமான்ஸ்! சீக்கிரம் ரெடி பண்ணிட்டு ஆஃபிஸ் கிளம்புங்க என்று சொல்லி திரும்பியவுடன், கார்த்திகாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது! உன்னை மாதிரி தான் எனக்கும்! நீ என்கிட்ட வந்து லவ் அ சொன்ன அந்த ஒரு நிமிடத்தை என்னாலயும் மறக்கவே முடியாது! ஐ லவ் யூ சோ மச் வினோத் செல்லம் என்று கார்த்திகாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது…..!
இந்த இருவரின் இடையே சிறியதொரு ஊடல் வந்தாலும்! “அந்த ஒரு நிமிடத்தை” நினைத்தால் போதும்! ஊடலும் கூடலாய் மாறிவிடும்! இந்த இருவரும் ஆயுள் முழுவதும் ஆனந்தமாய் வாழ “அந்த ஒரு நிமிடம்” போதும்!………..
நாம் ஒவ்வொருடைய வாழ்விலும் இதுபோன்ற “ஒரு நிமிடம்” இருக்கும். அதை நம்மில் பலர் நினைத்துப் பார்க்க மறக்கின்றோம்! அதனாலேயே வாழ்வில் நாம் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்கின்றோம்! எனவே “அந்த ஒரு நிமிடத்தை நினைப்போம், அனைவரும் ஆனந்தமாய் வாழ்வோம்!….”
– கதைப் படிக்கலாம் – 148