+2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு… கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், பொறியியல் மற்றும் அரசுக் கலை கல்லூரிகளில் சேர ஜூலை 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க https://www.tngasa.in/ சென்று பதிவு செய்யவும்.இணைய வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக ₹48ம் பதிவுக் கட்டணமாக ₹2ம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. (பதிவுக் கட்டணம் ₹2 மட்டும் செலுத்த வேண்டும்). விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்களில்   “The Director, Directorate of Collegiate Education, Chennai-6” என்ற பெயரில் வரைவோலையாகவோ (டிடி) அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.

Exit mobile version