மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் என, தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு என்பது கானல் நீராய் மாறிப்போனது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்கும் நோக்கில், 7.5% உள்இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து அரசாணையும் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும் தொடங்கியுள்ளது. இதனிடையே, அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் இந்த இடஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை, தமிழக அரசு நிராகரித்தது.
இந்நிலையில், மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற மாவட்டந்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு பெற அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் அவசியம் என்பதால், மாணவர்கள் நவம்பர் 12ந் தேதிக்குள் உதவி மையத்திற்கு சென்று பதிவு செய்து சான்றிதழ்களை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.