யாரும் குழப்பம் அடைய வேண்டாம்!தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வருகிற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் இடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டபோதும் இன்று நடைபெற உள்ள பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை என அரசு தேர்வுகள் இயக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துணைத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை !
-
By mukesh

Related Content
விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!
By
daniel
July 31, 2026
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை - மாணிக்கம் தாகூர்
By
daniel
July 31, 2026
ISI முத்திரை இல்லாத பொருட்கள் - ₹.2 லட்சம் அபராதம்
By
daniel
July 31, 2026
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025