குஜராத்தில் பள்ளி, கல்லூரிகள் 23ம் தேதி திறக்கப்படாது -முடிவை மாற்றியது அரசு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23ம் தேதி திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோன பாதிப்பு தற்போது அணைத்து மாநிலங்களிலும் குறைந்து உள்ள நிலையில். கொரோனா பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப, மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலங்களும் தன் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை திறக்கும் முடிவை எடுக்கின்றது. அதேபோல சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் கொரோன தாக்குதல் சற்றென்று அதிகரித்து வருகின்றது. அதனால் மற்ற மாநிலங்கள் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்காமல் அமைதி காத்து வருகின்றது. அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து அதற்கான உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

தற்போது கொரோன பாதிப்பு அதிகரித்ததால் இந்த முடிவை மறு பரிசீலனை செய்த அரசு 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என நேற்று அறிவித்தது. மேலும் கல்வி நிறுவனங்கள் குறித்த முந்தைய உத்தரவுகளையும் ரத்து செய்தது.

Exit mobile version