கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…

தமிழகத்தில் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 163 கலை கல்லூரிகளிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தோரில் 2.94 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேர 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1.63 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இணையவழியில்,விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நின்றுடன் நிறைவடைகிறது.பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 29ம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version