இன்றே கடைசி நாள்… உடனே அப்லோடு செய்யுங்க

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசிநாளாகும்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் காலியாக உள்ள 1.5 லட்சம் இடங்கள் பொதுக் கலந்தாய்வின் மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வு ஆகஸ்டு 16 முதல் அக்டோபர் 14ம் தேதிவரை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்றுமுன் தினம் நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.58 லட்சம் பேர் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் இன்றே (29.07.2022) கடைசிநாளாகும். மேலும், இது தொடர்பான விவரங்களை https://www.tneaonline.org/ சென்று தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version