டிப்ளமோ நர்சிங் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ நர்சிங் படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 23 கல்லூரிகளில் (19 அரசு கல்லூரிகள், 4 சுயநிதி கல்லூரிகள்) துணை மருத்துவ படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அரசுக்கல்லூரிகளில் 2536 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 22,200 இடங்களும் உள்ளன. இதில் 14,157 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த அரசு இடங்களின் எண்ணிக்கை 16,500 ஆக உள்ளது.

இந்த நிலையில், துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக மட்டும் அரசு கல்லூரிகளில் 27,000 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் ஆகஸ்டு 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in/  சென்று விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

-பா.ஈ.பரசுராமன்

Exit mobile version