11ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை அன்பில் மகேஷ் அறிவிப்பு

School kids in medical mask comes together outside classroom while not maintaining social distancing at school campus - Concept of school reopen,back to school with no safety measures and new normal lifestyle.

11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து சாரண,சாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். அதில் குழப்பம் வேண்டாம். கல்வி தொலைக்காட்சி CEO, RSS உள்ளிட்ட எந்த பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் . அதில், அரசு எச்சரிக்கையாக இருக்கிறது. தனியார் பள்ளிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையே கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

Exit mobile version