பூர்வீக சொத்தை விற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பூர்வீக சொத்தை விற்று தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரை, மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள டி.டி.மோட்டூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 2017-18 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர் குணசேகரன். தீவிர முயற்சிக்குப் பிறகு இந்தாண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண வர் குணசேகரனை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று பாராட்டி னார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது பேசிய மாணவர் குணசேகரன் கூறும்போது, கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண்கள் பெற்றதுடன் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம்’நீட்’ தேர்வு எழுதி 132 மதிப்பெண் கள் பெற்றேன் என்றார்.

இந்த மதிப்பெண் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணாக இருந்தும் தரவரிசையில் வாய்ப்பு கிடைக்க வில்லை. இதையடுத்து, ஓராண்டு வீட்டில் இருந்தபடியே படித்து கடந்த 2019-ல் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எழுதியதில் 332 மதிப்பெண்களை பெற்றேன். அப்போதும், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓராண்டு வீணாகியதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் சேர முடிவு செய்தேன்.

தனது தந்தை ராஜேந்திரன் கல் உடைக்கும் தொழிலாளி. பண வசதி இல்லாதததால் ‘நீட்’ தேர்வு பயிற்சிக் காக பூர்வீக நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில் பயிற்சிகட்டணம் ரூ.1 லட்சம், உணவுக் கட்டணம் ரூ.20 ஆயிரம் செலுத்தினோம்.

தங்குமிட வசதியை இலவ சமாக அளித்தார்கள். தற்போது அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் முன்னணி மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புள்ளது” என்றார்.

பூர்விக சொத்தை விற்று தான் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை உள்ளதாக, பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version