10-ம் வகுப்பு பொதுத் தேர்தல் முடிவுகள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!

10th class result
10th exam result

கர்நாடகாவில் மாநில கல்வித் துறையின் உத்தரவை அடுத்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்காக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல், வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. கர்நாடகாவில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அகமதிப்பீட்டு முறையில் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பலருக்கும் போடப்பட்டதை அடுத்து, கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதன்படி கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி பொதுத் தேர்வு துவங்கியது. தற்போது தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் கடைசி வாரத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும், 98 விழுக்காட்டு மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version