கோயில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு- திருவிழாவில் சோகம்..!!

parvathambal car festival

பார்வதாம்மா கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் சக்கரத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சோகம் பக்தர்களை சோகமடையச் செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் பகுதி கொள்ளேகால். அங்குள்ள கொள்ளேகால் பார்வதாம்பா கோயில் பிரசித்திப் பெற்றதாக உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் ஊரைச் சுற்றி தேர் பவனி வருவது வழக்கம்.

இந்நாண்டுக்கான கோயில் திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோலாகலமாக துவங்கியது. திருவிழாவில் இறுதிநாளான நேற்று தேரில் வைத்து பார்வதாம்பா ஊரைச் சுற்றி பவணி வந்தாள். இதை காண ஏராளமான மக்கள் ஊருக்குள் கூடினர்.

மேலும் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை அவர்கள் ஊரு முழுக்க இழுத்துச் சென்றனர். அப்போது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் தேர் சறுக்கலான இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.

இதில் கம்பேகாலா கிராமத்தை சேர்ந்த சர்பபூஷன் ( 27), சுவாமி(40) மற்றும் கூடசோகே கிராமத்தை சேர்ந்த கரிநாயக்(50) ஆகியோர் தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதை அறிந்த பக்தர்கள் மூவரையும் பத்திரமாக மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சர்பபூஷன், சுவாமி உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடி வந்த கர்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் குமார், விவரங்களை கேட்டறிந்தார். உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குண்டலுபேட்டை புறநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Exit mobile version