ஹரியானாவிலும் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக்காய்ச்சல் : 4 லட்சம் பறவைகள் உயிரிழப்பு

ஹரியானாவில் பறவைக்காய்ச்சலின் தாக்குதலால் 4 லட்சம் பறவைகள் உயிரிழந்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில், இந்தியாவில் பறவைகளிடையே உயிர் பறிக்கும் மர்ம பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தானில் (திங்கட்கிழமை) , 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிதாக பறவை இறப்புகள் பதிவாகியுள்ளன, நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்தனர்.

கேரளாவிலும் எச்5 என்8 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் கொல்லப்பட்டன. மேலும் 36 ஆயிரம் வாத்துகள் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more – ஆப்கானிஸ்தானில் வான்வெளி தாக்குதல் : பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இந்தநிலையில், புலம்பெயர் பறவைகள் மூலமாக நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் தொடர்ந்து தற்போது ஹரியானாவிலும் இதுவரை 4 லட்சம் பறவைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version