தவறுதலாக ஏற்றப்பட்ட 52 கோடி- எங்களுக்கே விட்டுக் கொடுத்து விடுங்களேன் விவசாயி கோரிக்கை!!

விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கே தந்து விடுமாறு அரசாங்கத்திடம் முதியவரான விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கிக்கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் பொறுமையாக செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

அதே போல வங்கிக்கு சென்று தனது கை ரேகையை வைத்து பார்த்த பொழுது 52 கோடிக்கு மேல் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், அந்த தொகை தன்னிடம் இருந்து பெறப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இவர் அரசாங்கத்திடம் புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது, நான் என் வாழ்நாளை விவசாயத்திலேயே முழுமையாக கழித்துள்ளேன். இருப்பினும் இன்னும் நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். எனவே அரசாங்கம் தனக்காக சிறிது பணத்தை வங்கிக் கணக்கிலேயே விட்டு விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version