செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்- ஆந்திராவில் தொடரும் அவலம்..!!

andhra pradesh serial powercut
andhra power cut

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக மருத்துவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக் காலம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு மேலாக மின்வெட்டு நீடிக்கிறது. ஆந்திராவிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். விசாகப்பட்டினம் மாவட்டம் நரசிபுரத்திலுள்ள மருத்துவமனையில் நேற்றிரவு பெண்ணுக்கு மருத்துவர்கள் சிலர் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

அப்போது நிலைமையை சமாளிக்க செல்போன் டார்க் அடித்து, அந்த வெளிச்சத்தில் பிரசவத்தை மருத்துவர்கள் தொடர்ந்தனர். நல்லவேளை சுகப்பிரசவத்தில அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிரந்தது.

இதுபோன்ற நிறைய சம்பவங்கள் மின்வெட்டு காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து வருகின்றன. குழந்தை வைத்துள்ள தாய்மார்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விரைவில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version