டெல்லியில் அக்.31 வரை பள்ளிகள் திறக்கப்படாது; மகிழ்ச்சியில் மாணவர்கள்

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக டெல்லியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்றும் குறையாத காரணத்தினால் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் டெல்லியில் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்து. ஆனால் இன்னமும் கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தினால் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Exit mobile version