டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்.. திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா ? போலீசார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ பதிவு

டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையாக முடிந்த நிலையில் 86 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி :

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற குழுவினர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை விரட்டி விரட்டி தாக்கினர். போராட்டகாரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க, மதில் சுவருக்கு கீழே உள்ள அகழியில் போலீசார் ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய அவசர ஆலோசனையில், டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டு வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Read more – இன்றைய ராசிபலன் 27.01.2021!!!

வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி போலீசார், 86 காவல் துறையினர் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதில், காயமடைந்த போலீசார் பலருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், காவல்துறைக்கு சொந்தமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசாரை கடுமையாக தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு ஆதாரமானவீடியோவை காவல்துறை சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version