மைக்ரோவேவ் ஓவனில் கிடந்த 2 பெண் குழந்தை சடலம்- போலீஸ் அதிர்ச்சி..!!

Delhi Police

பிறந்து இரண்டே மாதங்களான பெண் குழந்தை மைக்ரோவேவ் அவனில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தெற்குப் பகுதியிலுள்ள இடம் சிராக். இங்கு வசித்து வரும் குல்ஷன் கௌசிக் மற்றும் டிம்பிள் தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்ததால் டிம்பிள் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையில் அவ்வப்போது வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதையடுத்து சிராக் பகுதி போலீசாருக்கு டிம்பிளின் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் குல்ஷன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ஒரு அறையில் டிம்பிளும் அவருடைய 4 வயது மகனும் மயங்கி கிடந்துள்ளனர். சமையலறையில் இருந்த மைக்ரோவேவ் அவனில் இருந்து இரண்டு மாத பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

இது போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. குழந்தை இறந்துபோனது தொடர்பாக தம்பதிகள் குல்ஷன், டிம்பிள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version