கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
Christmas & New Year 2021

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு மேலும் சில மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், காற்று மாசு இன்னும் குறையாததால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கும் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களிலும், பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காற்று மாசு பரிசோதனை மையத்தை விரைவில் அமைக்க வேண்டுமெனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று, இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சிலிண்டர் புக் பண்ணுங்க… 500 ரூபாய் கேஷ்பேக் பெறுங்க!!! விவரம் உள்ளே…

Exit mobile version