தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் சுட்டுக்கொலை! பகீர் சம்பவம்

தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து ஆளும் கட்சி, எதிர்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எனப் பலரும் தங்களின் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ஹியோகர் மாவட்டத்தில் உள்ள ஹைத்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரவாடி என்ற கட்சியின் வேட்பாளரும் பிரச்சாரம் அங்குள்ளா பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்களர்களிடம் வாக்குகள் சேகரித்து வந்தார். அப்போது சிலரால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளதாகவும் மேற்கொண்டு அவர்களிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

Exit mobile version