அடி தூள்.. நாடு முழுவதும் 30 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கால், மத்திய அரசின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை கூட வழங்க முடியாத நிலையில் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதிப்பற்றாக்குறையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்குமா என கேள்வி எழுந்தது. இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். விஜயதசமிக்கு முன்னதாக ஒரே தவனையாக போனஸ் வழங்கப்படும் எனவும் கூறினார்.

அதன்படி, சுமார் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.3737 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Exit mobile version