கார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான ஏழு இடங்களில் சி.பி.ஐ திடீர் சோதனை..!!

Karti Chidambaram, P. Chidambaram
Karti Chidambaram, P. Chidambaram

காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான ஏழு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலுள்ள கார்த்திக் சிதம்பரத்துக்கு தொடர்புடைய 7 இடங்களில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐ.என்.எக்ஸ் மீடியா என்கிற நிறுவனத்துக்கு கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக ப. சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையில் வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக இருவருக்கும் தொடர்புடைய இடங்களில் 4 முறை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடந்து வருகிறது. கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையே கார்த்திக் சிதம்பரத்துக்கு தொடர்புடைய நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பண வரவுகள் கொண்டிருந்தன. அதுதொடர்பான ஆவணங்களை திரட்ட இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இதுபோன்ற சோதனை நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று முடிவடையும் நிலையில், இதுதொடர்பான முழு விபரங்களும் தெரிய வரும் என்று எதிர்பார்ககப்படுகிறது.

இதற்கிடயில் சி.பி.ஐ நடத்தி வரும் சோதனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்கிற கணக்கு நினைவில் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version