வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
கனமழை காரணமாக வட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததால் வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக ஏற்றம் கண்டது. மொத்த விற்பனைக்கே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் எகிறியது.
இதனிடையே, மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால், எகிப்து, துருக்கி போன்ற பல நாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை செய்தும் வணிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், விளையேற்றத்தை குறைக்க மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.