கொரோனா மரணம்… நிவாரண தொகை குறித்து மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடலாடி ஆணை!

இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படவில்லை கூனக்கூறி நிவாரணத்தை வழங்க மாநில அரசு மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க்கோரி கவுரவ்குமார் பன்சால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பதிலளித்த மத்திய அரசு இறந்தவர்கள் குடும்பத்துக்கு 50ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கஙாம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்ற உச்சநீதிமன்றம், சில உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பாக குறைகளை களைய ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை மாநில அரசுகள் 1 வாரத்தில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என்ற மத்திய அரசின் யோசனையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்த விவகாரத்தில் கூடுதல் நிவாரணம் என்பது மத்திய , மாநில அரசுகளின் வேறு திட்டங்கள் மூலம் வழங்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், எக்காரணம் கொண்டும் இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படவில்லை கூனக்கூறி நிவாரணத்தை வழங்க மாநில அரசு மறுக்கக்கூடாது எனவும் இந்த நிவாரண தொகை என்பது 30 நாட்களுக்குள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே கொரொனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச்சான்றிதழில் “கொரோனா மரணம்” என குறிப்பிடவில்லை என்றாலும் கூட இந்த நிவாரணத்தை பெற உரிய அமைப்பை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐம்பதாயிரம் ரூபாயை வழங்கும்போது, அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக நிவாரணம் வழங்கப்பட்டவரின் விவரம் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பிரசூரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பாக குறைகளை களைய ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை மாநில அரசுகள் 1 வாரத்தில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version