உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலையாக காண விருப்பமா? இத கிளிக் பண்ணுங்க

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.

நீதிமன்ற வழக்கு விசாரணையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மனிதநேய மேம்பாட்டாளர்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், இன்று, உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

நேரலையை காண விரும்பும் அன்பர்கள் https://webcast.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று காணலாம். அதில், ceromonial bench என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது https://webcast.gov.in/events/MTc5Mg– ஓபன் ஆகும். இதில், இன்று காலை 10:30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பு தொடங்கவிருக்கிறது. இதற்கிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.

Exit mobile version