பொது முடக்க தளர்விற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் இதுவரை 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பக்தர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. பொது முடக்கத்தளர்விற்கு பின் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டாலும் இதில் எந்தவித பலனும் இல்லை. ஏற்கனவே அர்ச்சகர் முதல் ஊழியர்கள் வரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதும் அதே நிலை தான் இங்கு நீடித்து வருகிறது
இந்த நிலையில் தான் இதுவரை 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பக்தர்களுக்கு இடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து 402 பேர் வீடு திரும்பியுள்ளனர் எனவும், 338 பேர் தனிமைப்படுத்தபட்ட முகாமில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் திருப்பதி கோவில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல எண்ணத்துடன் தான் தேவஸ்தான ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் இதுவரை பக்தர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.