’கேரள தங்க கடத்தல்’ … ’நிழல் உலக தாதா ‘தாவூத்தின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு என சந்தேகம்…

கேரள மாநிலத்தில் பெரும் விஸ்வரூமெடுத்திருக்கும் வழக்காக தங்கக் கடத்தல் வழக்கு மாறியுள்ளது.

பல கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந் த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் உள்ளிட்ட ஏழு பேரை அமலாக்கத்துறை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கேரள கொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழ்க்கை எதிர்த்து ஸ்வப்னா, சந்தீப் உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணையின்போது, தங்கக் கடத்தல் வழக்கில் முழுமையான விசாரணை நடத்த 180 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் அவசியம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் தேசியப் புலனாய்வ்பு முகமை இந்தியாவால் தேடப்பட்டு வருகிறவரும், பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிற நிழல் உலகத் தாதா தாவூத்தின் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக  இந்த தங்கக் கடத்தல் நடத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளது.

Exit mobile version