மோசமான நிலையில் டெல்லி காற்று மாசுபாடு…

டெல்லியில் காற்றுமாசுபாடு தொடர்ந்து “மோசமான” நிலையிலே நீடிப்பதால் டெல்லிவாசிகள் கவலை.

டெல்லி, தீபாவளி பண்டிகைக்கு முன்னரே காற்றுமாசுபாட்டின் நிலை படிப்படியாக உயர தொடங்கிய நிலையில் பண்டிகைக்கு பின்னர் மோசமான நிலைக்கு சென்றது; சுவாசிக்க தேவையான காற்றின் தரம் 50 என்றால் டெல்லியின் ஒரு சில பகுதிகள் 900-ஐ கடந்து சென்றது. இதனால் பெரும்பாலானோருக்கு கண் எரிச்சல், இருமல் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டது.

இரண்டாவது நாளான இன்றும் டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் “மோசமான” பிரிவிலே உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. டெல்லி பாஞ்சாபி பாக் 468,சாந்தினி சவுக் 475, டெல்லி ஐடிஓ 463,ஆனந்த் விஹார் 471,நேரு நகர் 469,ஜவஹர்லால் நேரு அரங்கம் 468 என மாநிலத்தின் மொத்த காற்றின் தர அளவு என்பது 533 என்ற அளவில் உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்பும் காற்றின் தரம் மோசமான நிலையிலே நீடிக்க காரணம், நேற்றும் டெல்லியின் ஒரு சில பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதும் டெல்லியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாய பயிர்களின் கழிவுகளை மீண்டும் எரிக்க தொடங்கியுள்ளதும் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் டெல்லியின் வெப்பநிலை குறைந்து குளிர் மேலும் அதிகரிக்கும் என்பதால் காற்றின் தரம் மோசமான பிரிவிலே நீடிக்கலாம் என டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version