டெல்லி பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு : டெல்லி போலீசார் அதிரடி அறிவிப்பு

டெல்லி பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி :

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாற்று ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து கடும் குளிர், மழை பாராது போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கடந்த குடியரசு தினத்தன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி மிக பெரிய வன்முறையாக வெடித்தது. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 86 க்கும் அதிகமான போலீசாருக்கு கை கால்களில் எலும்பு முறிவு மற்றும் காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் டெல்லி காவல் துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

Read more – எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு : தங்க நாக்குகளுடன் புதைக்கப்பட்ட அதிசயம்

இந்தநிலையில், செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திசைத்திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது, தலைமறைவாக உள்ள நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் 4 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

Exit mobile version