விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு : டெல்லியில் தொடரும் பரபரப்பு

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி எல்லையில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

புதுடெல்லி :

மத்திய அரசுடன் நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் 62 வது நாளான இன்று மேலும் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், டெல்லி எல்லையில் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த டிராக்டர் பேரணியை மேலும் வலுப்படுத்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் முன்னேறினர். காவல்துறையினர் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

Read more – கனவிலும் கூட ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் விவசாயிகள் நுழைய முயன்றதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி வருகின்றனர். மேலும், கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் தடியடி நடத்தியும் விவசாயிகளை விரட்டி அடித்துள்ளனர். அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version