மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29-ம் தேதி மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது. மத்திய அரசும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதால், அன்றைய தினம் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசுடன் டிச.29-ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Read more – ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் : பிரதமர் மோடி

ஏற்கெனவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கப்போவதாக விவசாய அமைப்புகள் கூறியுள்ளனர்.

Exit mobile version