தலைநகர் டெல்லியில் தீபாவளி அன்று வழக்கமாக ஏற்படுவதை விட 25% குறைவாகவே தீ விபத்துகள் ஏற்பட்டு இருப்பதாக டெல்லி தீயணைப்பு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி, இது குறித்து டெல்லி தீயணைப்பு காவல் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளி அன்று தீயணைப்புத் துறைக்கு 205 அழைப்புகள் வந்த நிலையில் இந்தாணடு 152 அழைப்புகள் வந்ததாகவும் இதில் நாளில் பெறப்பட்ட ஒவ்வொரு அழைப்பு மிகவும் சிறிய அளவிலான தீ விபத்துகள் குறித்து மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது 25 சதவிகிதம் குறைவாகவே தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளது என்றும் அதிலும் பெரிய அளவிலான தீ விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை யாரும் உயிர் இழப்பு போன்றவை எதுவும் நிகழவில்லை எனவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் டெல்லியில் 30 இடங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் உஷார் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணியமர்த்தப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.