அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அதிகரிப்பை அமல்படுத்துவதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் வழங்க்கப்படுவதை போன்றே, அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஏராளமான சேவைகளும் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 ஆக இருந்ததை, ரூ.500-ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த, அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.500-ஆக உயர்த்திக் கொள்ள, அடுத்த 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் ஆக உயர்த்தாத பட்சத்தில், அபராதமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு கணக்கு காலாவதி ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை, வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள், ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வேண்டும் என, சென்னை தாம்பரம் கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.