மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- மாநிலங்களுக்கு சுகாராத்துறை எச்சரிக்கை..!!

Rajesh Bhusan
new corona cases

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் போக்குவரத்து பயன்பாடு மற்றும் இதர தேவைகளில் மாநில அரசு கண்கானிப்பை தீவரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Exit mobile version