ரேஷனில் இலவச அரிசிமற்றும் தானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண அன்னா யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் இலவச அரிசி, தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இந்த திட்டத்தை செப்டம்பருக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என செலவினத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த திட்டம் நாட்டின் நிதிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இது நிதி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சமீபத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்பட்டதால் அரசுக்கு ₹1லட்சம் கோடிக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நிவாரணம் வழங்கினால் அது மேலும் நிதிச்சுமையை அதிகரிக்கும். இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தால் உணவு மானியச்செலவு ₹80,000 கோடி அதிகரித்து ₹3.70 லட்சம் கோடியாக உயரும். எனவே,செப்டம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
