இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18வயது இளம்பெண் இயற்கை உபாதைகளை கழிக்க அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 4 பேருக்கும் 25-35 வயது இருக்கும். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள். தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.