348 சீன செயலிகள் முடக்கம் மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 348 சீன செயலிகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்போனில் பயன்படுத்தும் செயலிகள் மூலம் பயனாளர்களின் தரவுகள் திருடப்படுகிறதா? என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 348 சீனசெயலிகள் இந்தியாவில் உள்ள தரவுகளை திருடியுள்ளது. தேசத்தின் பாதுகாப்பு & மாநிலத்தின் பாதுகாப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில் இத்தகைய செயலிகளின் செயல்பாடு அமைந்தது. அதன் காரணமாக மத்திய அரசு செயலிகளை முடக்கியதாகவும்,348 செயலிகள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டவை எனவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்

Exit mobile version