37 புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பஞ்சாப்-அரியானா நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கை ஆகும். தற்போது அந்த எண்ணிக்கையை தாண்டி 138 நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version