SBI வங்கியில் ₹11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயம்…25 இடங்களில் சிபிஐ சோதனை

எஸ்பிஐ வங்கியில் ₹11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் திருடு (மாயமான) போயுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ராஜாஸ்தான் மாநிலம் கராலியில் எஸ்பிஐ வங்கி கிளை உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் ஏராளமான நாணயங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நாணயங்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து நாணயங்களை எண்ணும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியின் இறுதியில் ₹11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், ராஜஸ்தான்  உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று 25 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், தவுசா, கராலி, சவை மாதோபூர், ஆல்வார், உதய்பூர், பில்வாரா மற்றும் டெல்லி உள்பட 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வங்கி முன்னாள் அதிகாரிகள் 15பேருக்கு சொந்தமான இடங்களிலும் இச்சோதனை நடைப்பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு இந்த ₹11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயமாகி போனது வெளிச்சத்துக்கு வந்தது. அபோது ₹2 கோடி மதிப்பிலான 3000 நாணயங்கள் அடங்கிய பைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன.

Exit mobile version