ராஜஸ்தானில் 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு பட்ஜெட்டில் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது. இதற்காக ₹12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதற்கான டெண்டர் விடப்பட்டதில் இணைய இணைப்பு அளிப்பதற்காக 3தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவற்றில் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பண்டிகை காலம் வருவதற்குள் ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
