எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

டெல்லியில் 48 வயது நிரம்பிய பெண் மீது கொண்ட காதலுக்கு இடையூராக இருந்த 17வயது மகளை 18வயது நிரம்பிய இளைஞன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி திக்ரி எல்லைப்பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞன் ஹரிஷ், பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தான். அங்கு பணிபுரியும் 48 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் காதலித்ததாக கூறப்படுறது. இந்த நிலையில், அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு இது பிடிக்கவில்லை. அப்பா உயிருடன் இருக்கும் போது அம்மா அந்த பையனை காதலிப்பதற்கு இடையூராக இருந்துள்ளார். இதனால், அந்த சிறுமியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த அந்த இளைஞன் நேற்று மதியம் 1 மணி அளவில் லேக் ராம் பூங்காவில் வைத்து அவளது கழுத்தை அறுத்துள்ளான்.

அப்போது, பூங்காவில் இருந்த மக்கள், அந்த சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்து சிறுமையை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ஹரிஷ் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version