உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
யு.யு.லலித் சில தகவல்கள்:
*யு.யு.லலித் 1957ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 9ம் தேதி பிறந்தார்.
*சட்டப்படிப்பை 1983ம் ஆண்டு முடித்தார்.பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
*2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
*2014ம் ஆண்டு ஆகஸ்டு 13ம் தேதி யு.யு.லலித்தை அப்போதைய தலைமை நீதிபதி, நீதிபதியாக பரிந்துரை செய்தார்.
*இவர் 2022, நவம்பர் 9ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.