முருக மடத்தின் மடாதிபதி போக்சோவில் கைது

மாணவிகளை பலாத்காரம் செய்ததாக முருக மடத்தின் மடாதிபதி உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருகமடம். இங்கு தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சித்ரதுர்கா முருக மடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு. ஒன்றறை ஆண்டுகளுக்கு மேலாக பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, புகாரின் பேரின் மைசூரு நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி வஸ்தி நிலையத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version