சீனாவில் இருந்து தேசியக்கொடி இறக்குமதி சபாநாயகர் அப்பாவு வேதனை

தேசியக்கொடியில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் , மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற  வளாகத்திற்குள் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்கள் கைகளில் தேசியக்கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடியில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது: சீனாவில் தயாரித்த தேசியக்கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது.  தேசியக்கொடியை கூட சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வது வேதனைக்குரியது. இதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றார்.

Exit mobile version