220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்பு

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மனு உள்பட 220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தில் ஆயிரங்கணக்கான பொதுநல மனுக்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று 220 பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. மேலும், பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்க போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் சட்ட உதவி மையங்களை ஏற்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Exit mobile version