பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி 25 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர்  யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் நோக்கி இன்று காலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 36 பேர் பயணம் செய்தனர். பிராரி நல்ஹா என்ற மலை பாங்கான பகுதியில் உள்ள சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். போலீசார், ராணுவம் & உள்ளூர் மக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version