ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பலனளிக்கும் என்று சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது: – ராமர் கோவில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதால் அதனைப் பற்றி பேசி வாக்கு பெற முடியாது. அதனால், லவ் ஜிகாத் என்ற புதிய விஷயம் கையிலெடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை பலனளிக்கும் என நம்புகிறேன்.
2022-ஆம் ஆண்டில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நம்மால் பார்க்க முடியும்” என்றார்.