இந்தியா- கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு நோய் தொற்று உறுதி..!

இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த கொரோனா பாதிப்பு இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version