வாட்ஸ் ஆப் குழுவில் நடைபெற்ற ஐபிஎல் சூதாட்டம்…. கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் ! அதிர்ச்சித் தகவல்….

 வாட்ஸ் ஆப் குழு மூலம் நடைபெற  ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல்-2020  தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் பொது ஊரடங்கு காரணமாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

சற்றுத் தாமதமாகத் தொடங்கினாலும்கூட ரசிகர்களின் ஏகோபித்த ஆதவரவைப் பெற்று டிஆர்பிலும் முன்னணியில் உள்ளது ஐபிஎல் கிரிக்கெட்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோட்வாலி பகுதியில்  ஒரு வீட்டில் பல கோடியில் ஐபிஎல் சூதாட்டம் நடப்பதாக போலீஸுக்குத் தகவல் வந்தது.

இதையத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்வைத்து, கோவில்களின் பெயரில் 30 ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்கல் மூலம் சூதாட்டம் நடத்தி வந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் ரூ. 4கோடியே 20 லட்சம் பணம் மற்றும் செல்போன்கள், கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version