’சாமி சன்னிதிக்கு வந்து பாயாசம் சாப்பிடும் முதலை’….வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

சாமி சன்னிதிக்கு வந்து ராட்சத முதலை பாயாசம் சாப்பிடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள அனந்தபத்மசாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்றது.

இங்குள்ள குளத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முதலை இருப்பதாகத்  கூறப்படுகிறது.

இதுகுறித்த ஆச்சர்யமான தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தாலும் முதன்முறையாக சன்னிதானத்திற்குள் முதலை வந்துசென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த ராட்சத முதலையான பப்பியா கோயிலில் படைக்கப்படும் பாயாசம் சாப்பிடுவதுடன் கோயிலில் ஒலிக்கும் பக்திப் பாட்டுக்கும் ரசிகர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version